ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

தமிழ் மீடியம் அறிவியல் ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #308
    சந்தோஷ்
    Keymaster
    @san

    ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
    தாவிரங்கள் (plants), பாசிகள் (algae) மற்றும் சில வகை பாக்டீரியாக்கள் தமது உணவை தாமே தயாரித்துக்கொள்கின்றன. இந்த நிகழ்வுக்கு பெயர் தான் ஒளிச்சேர்க்கை (photosynthesis) அல்லது ஒளித்தொகுப்பு.

    ஒளிச்சேர்க்கை எவ்வாறு நடைபெறுகின்றன?

    ஒளிச்சேர்க்கை நடைபெறவேண்டுமானால் அதற்கு நான்கு பொருட்கள் மிகவும் அவசியம்.

    1. கரியமிலவாயு (carbon dioxide): கரியமிலவாயுவை காற்றிலிருந்து தாவிரங்கள் எடுத்துக்கொள்ளும்.
    2. தண்ணீர் (water): தண்ணீரை தாவிரங்களின் வேர்கள் நிலத்திலிருந்து உறிஞ்சிக்கொள்ளும்.
    3. ஒளியணுக்கள் (photons): ஒளியணுக்களை சூரிய ஒளியிலிருந்து தாவிரங்கள் பெற்றுக்கொள்ளும்.
    4. பச்சையம் (chlorophyll): இது அனைத்து தாவிரங்களிலும் இயல்பாகவே இருக்கும் ஒரு நிறமி. தாவிரங்களுக்கு பச்சை நிறத்தை அளிப்பது இந்த பச்சையம் தான்.

    ஒளிச்சேர்க்கை சமன்பாடு

    ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

    இதுவே ஒளிச்சேர்க்கையின் சமன்பாடாகும். கரியமிலவாயு, தண்ணீர், ஒளியணுக்கள் மற்றும் பச்சையம் ஆகிய நான்கையும் பயன்படுத்தி கார்போவைதரேட்டு (carbohydrate) என்று சொல்லப்படும் ஒருவகை மாவுப்பொருளை தாவிரங்கள் தயாரிக்கின்றன. இதுவே தாவிரங்களுக்கு உணவாகவும் அமைகின்றது. மேலும், ஆக்சிசன் (Oxygen) என்று சொல்லப்படும் உயிரகம் மற்றும் சிறிதளவு தண்ணீரும் வெளியாகின்றது.

    ஒளிச்சேர்க்கையின் விளைவால் ஆக்சிசன் வெளியாவதால், ஒளிச்சேர்க்கை உலகின் உயிர் வாழ்வுக்கு மிகவும் அடிப்படையான ஒரு அறிவியல் நிகழ்வாகும்.

    ஒளிச்சேர்க்கை பற்றிய உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் கிழே உள்ள கருத்துப்பகுதியில் பதிவுசெய்யுங்கள்.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.