நியூட்ரினோ என்றால் என்ன?
தமிழ் மீடியம் › அறிவியல் › நியூட்ரினோ என்றால் என்ன?
Tagged: இயற்பியல்
- AuthorPosts
- December 10, 2019 at 3:09 PM #139சந்தோஷ்Keymaster@san
நியூட்ரினோ எவ்வாறு உருவாகின்றன? உலகமெங்கும் நியூட்ரினோ ஆய்வு மையங்களை அமைப்பதற்கான அவசியம் என்ன?
நியூட்ரினோ (Neutrino), தமிழில் இதற்கு நுண்நொதுமி என்று பெயர். இந்த நுண்நொதுமிகள் ஒருவகையான அணுத்துகள்கள் (sub-atomic particles) ஆகும்.
ஒளித்துகள்கள் (photons) பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். இந்த ஒளித்துகள்களைப் போலவே நியூட்ரினோக்களுக்கும் எந்த ஒரு இடையோ (no mass) அல்லது மின்மமோ (no electric charge) கிடையாது.
நியூட்ரினோ வகைகள்
இந்த நியூட்ரினோக்களில் மூன்று வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இயற்பியல் பொறுத்தவரை, ஒரு துகள் (particle) இருந்தால் அதற்கு எதிர்மறையான ஒரு எதிர்த்துகள் (anti-particle) இருக்கும். இதே போல நியூட்ரினோக்களுக்கும் எதிர்மறையான நியூட்ரினோக்கள் உள்ளன. இவற்றை ஆன்டி-நியூட்ரினோ (anti-neutrino) என்று சொல்வார்கள்.
நியூட்ரினோ எவ்வாறு உருவாகின்றன?
இந்த நியூட்ரினோக்களுக்கு எந்த ஒரு மின்மத் தன்மையும் கிடையாது. இவற்றை மின்காந்த அலைகளால் பாதிக்க இயலாது. நியூட்ரினோக்கள் அனைத்து பொருள்களிலும் எளிதாக புகுந்து சென்றுவிடும். அதனால் இந்த நியூட்ரினோக்களை கண்டறிந்து ஆராய்வது என்பது மிக கடினமான ஒன்று.
ஒவ்வொரு நொடியும் நம் உடம்பினுள் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் புகுந்து சென்று கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றை நம்மால் பார்க்கவோ உணரவோ இயலாது.
இந்த நியூட்ரினோக்கள் எங்கிருந்து உருவாகி வருகின்றன? சூரியன் போன்ற நட்சத்திரங்களில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அணுக்கரு இணைவில் (nuclear fusion) இருந்து உருவாகி பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றன.
நியூட்ரினோக்களை ஆராய்வதற்கான அவசியம் என்ன?
உலகமெங்கும் ஆய்வு மையங்கள் அமைத்து இந்த நியூட்ரினோக்களை கண்டறிந்து ஆராய்வதன் மூலம் இயற்பியலின் அடிப்படைக் கேள்விகளுக்கு நமக்கு பதில் கிடைக்கும்.
சூரியன் போன்ற நட்சத்திரங்களில் ஏற்படும் அணுக்கரு இணைவில் என்ன நடக்கின்றன என்பதைப் பற்றி படிக்க உதவும். மேலும், இந்த பிரபஞ்சம் பெரு வெடிப்பினால் (Big bang) உருவான பொழுது, துகள்கள் மற்றும் எதிர்த்துகள்கள் சரி சமமாக இருந்தன. ஆனால், அதன் பிறகு எதிர்த்துகள்கள் மறைந்துவிட்டன.
பிரபஞ்சத்தில் துகள்கள் மற்றும் எதிர்துகள்கள் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுக்கான பதில் இந்த நியூட்ரினோக்களை ஆராய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும்.
- AuthorPosts
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?