புகைபிடித்தல் (Smoking) நமது நுரையீரலை எப்படிச் சீரழிக்கிறது?

தமிழ் மீடியம் வாழ்க்கை முறை புகைபிடித்தல் (Smoking) நமது நுரையீரலை எப்படிச் சீரழிக்கிறது?

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #598
    சந்தோஷ்
    Keymaster
    @san

    சினிமாக்களில் ஹீரோக்கள் ஸ்டைலாகப் புகைபிடிப்பதைப் பார்த்துப் பல இளைஞர்களும் புகைபிடிக்கும் (Smoking) பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். “நான் எப்போதாவது ஒரு சிகரெட் தான்குடிக்கிறேன், எனக்கு ஒன்றும் ஆகாது” என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கும்போது நமது உடலுக்குள் என்னென்ன கொடூரங்கள் நடக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

    சிகரெட்டில் என்ன உள்ளது?

    சிகரெட் என்பது வெறும் புகையிலை (Tobacco) மட்டுமல்ல. அதில் தார் (Tar), கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide), எலி மருந்துக்குப் பயன்படும் ஆர்சனிக், மற்றும் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் காட்மியம் எனப் சுமார் 7,000 வகையான ரசாயனங்கள் உள்ளன. இதில் குறைந்தது 69 ரசாயனங்கள் நேரடியாக கேன்சரை (Cancer) உருவாக்கக் கூடியவை என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

    நிகோடின் என்னும் போதை

    சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’ (Nicotine) என்ற பொருள்தான் மனிதர்களை அதற்கு அடிமையாக்குகிறது. புகையை உள்ளே இழுத்த வெறும் 10 விநாடிகளில், இந்த நிகோடின் ரத்தத்தில் கலந்து மூளையைச் சென்றடைகிறது. மூளை உடனே ஒருவித தற்காலிகப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. அந்த உணர்வுக்காகவே மனிதர்கள் மீண்டும் மீண்டும் புகைபிடிக்கத் தூண்டப்படுகிறார்கள்.

    நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகள்

    நமது நுரையீரலில் உள்ள சிறிய முடிகள், நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி வெளியேற்றும். ஆனால், தொடர்ந்து புகைபிடிப்பதால் இந்த முடிகள் கருகி அழிந்துவிடும். இதனால் சிகரெட்டில் உள்ள ‘தார்’ என்ற கறுப்பு நிறப் பசை, நுரையீரலின் உட்புறம் முழுவதும் படிந்துவிடுகிறது. ரோடு போடுவதற்குப் பயன்படுத்தும் அதே தார்தான் இதுவும்.

    இதனால் நுறையீரலால் ஆக்ஸிஜனை சரியாக உறிஞ்ச முடியாமல் போய்விடும். இதனால்தான் புகைபிடிப்பவர்களுக்கு மூச்சு வாங்குதல், தொடர்ந்து இருமல் வருவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    மாரடைப்பு மற்றும் பக்கவாதம்

    புகைபிடிப்பது நுரையீரலை மட்டும் பாதிக்காது; இதயத்தையும் கடுமையாகப் பாதிக்கும். புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் செல்வதைத் தடுத்து ரத்தத்தைக் கெட்டியாக்குகிறது. இதனால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Stroke) வர அதிக வாய்ப்புள்ளது.

    புகைபிடிப்பவர்கள் தங்கள் உயிரை மட்டும் அழித்துக்கொள்வதில்லை; அவர்கள் விடும் புகையைச் சுவாசிக்கும் அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோயைக் கொடுக்கிறார்கள் (Second-hand Smoking). இந்தப் பழக்கத்தை இன்று கைவிட்டாலும், உங்கள் நுரையீரல் பழைய நிலைக்குத் திரும்பக் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும். எனவே, “இன்றே புகைப்பழக்கத்தைக் கைவிடுங்கள்” என்பது வெறும் விளம்பர வாசகம் அல்ல, அது ஒரு உயிர் காக்கும் மந்திரம்.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.