மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
தமிழ் மீடியம் › அறிவியல் › மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
Tagged: வேதியியல்
- AuthorPosts
- December 9, 2019 at 3:15 PM #125சந்தோஷ்Keymaster@san
சில பூச்சிகள் எவ்வாறு நீரின் மீது எளிதாக நடக்கின்றன? நீரை விட அடர்த்தியான சிறிய பொருட்கள் எவ்வாறு நீரில் மிதக்கின்றன? மழைத்துளிகள் ஏன் உருண்டையான வடிவத்தில் இருக்கின்றன? இந்த அனைத்து கேள்விகளிக்கும் ஒரே பதில், மேற்பரப்பு இழுவிசை (surface tension).
இந்த மேற்பரப்பு இழுவிசை பற்றிய சில ஆங்கில வார்த்தைகளின் தமிழாக்கம்.
மூலக்கூறுகள் (molecules)
அணுக்கள் (atoms)
நீரகம் (Hydrogen)
உயிரகம் (Oxygen)
திரவம் (liquid)தண்ணீரில் நீரகம் மற்றும் உயிரகம் அணுக்களால் ஆன மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று எப்பொழுதும் ஒட்டி இருக்கும். ஆனால், தண்ணீரின் மேற்பரப்பில் உள்ள மூலகூறுகளால் காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் ஒட்ட முடியாது.
இதனால், நீரின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று வலுவாக ஒட்டிக்கொண்டு தண்ணீரின் தோல் போல செயல்படும். குறைவான இடையுள்ள சிறிய பொருட்களை மூழ்க விடாமல் இந்த மேற்பரப்பு தாங்கிக்கொள்ளும். இதனால் தான் பூச்சிகளால் தண்ணீரின் மீது மூழ்காமல் நடக்க முடிகின்றது.
நீர்குமுழிகளில், காற்று இந்த மேற்பரப்பு இழுவிசையில் மாட்டிகொண்டு, அனைத்து திசைகளிலும் வெளியேற முயற்சிக்கும், இதனால் தான் நீர்குமுழிகள் உருண்டையான வடிவம் பெறுகின்றன.
இந்த மேற்பரப்பு இழுவிசை தண்ணீரில் மட்டுமல்ல, மற்ற திரவங்களிலும் பார்க்க முடியும். ஆனால், ஒவ்வொரு திரவத்திற்கும் அதன் மேற்பரப்பு இழுவிசையின் சக்தி மாறுபடும்.
- AuthorPosts
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?