தமிழ் வழிக் கல்வியின் அவசியம்
தமிழ் மீடியம் › தமிழ் மொழி › தமிழ் வழிக் கல்வியின் அவசியம்
Tagged: கல்வி
- AuthorPosts
- December 9, 2019 at 11:46 AM #100சந்தோஷ்Keymaster@san
யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு நடத்திய ஒரு ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒரு தகவலை வழங்கியுள்ளது.
தாய் மொழியில் கல்வி கற்கும் குழந்தைகளால் கல்விப் பாடங்களை ஆழமாக புரிந்துகொள்ள முடியும் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு. இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, கல்வி பயிலும் அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.
சீனா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், பின்லாந்த், ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் மக்கள் தங்கள் தாய்மொழியில் தான் கல்வியை கற்கின்றனர்.
கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை தாய்மொழியின் வாயிலாக கற்கும்போது, நம்மால் அவற்றை நன்கு புரிந்துகொள்ள முடியும். அதேசமயம், பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தமிழ் திரைப்படத்தையும் ஒரு ஆங்கில திரைப்படத்தையும் பார்க்கிறீர்கள். இதில் எந்தப் படம் உங்களுக்கு நன்றாக புரியும்?
“நாடும் மொழியும் நமது இரு கண்கள்”, என்றார் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இந்த பொருளாதார உலகில், தமிழில் கல்வி பயிலும் ஒரு மாணவனுக்கு எந்த வகையிலும் ஒரு தாழ்வு நிலை ஏற்படாத ஒரு சூழல் உருவாகும்போது தான் அனைவரும் தமிழில் கல்வியைக் கற்க முன்வருவார்கள். அந்தச் சூழலை உருவாக்க மக்களும் அரசாங்கமும் சேர்ந்து முயன்றால் மட்டுமே அது சாத்தியம்.
ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அதனைக்கொண்டு ஒருவரின் திறமையை மதிப்பிடுவது தவறு என்பதை மக்கள் உணரவேண்டும். ஆங்கிலத்தை முழுமையாக புறக்கணிக்காமல், தமிழ் வழிக் கல்வியுடன் ஆங்கிலத்தையும் ஒரு மொழியாக எடுத்துக்கொண்டு பயின்றால் மட்டுமே நம்மால் சர்வதேச அளவில் மற்ற நாட்டு மக்களுடனும் மற்ற மாநில மக்களுடனும் நம்மால் கருத்துக்களை எளிதாக பரிமாற முடியும்.
அதானால், ஆங்கிலமும் ஆவசியம், அதேசமயம் தமிழ் வழிக் கல்வியும் மிக அவசியம். தமிழ் வழிக் கல்வி அடிப்படையானால், அதன் வாயிலாக நம்மால் ஆங்கிலம், ஹிந்தி போன்ற பல மொழிகளையும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.
சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே. தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்போம். கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
- AuthorPosts
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?