தமிழ் மொழியும் தொல்காப்பியமும்

தமிழ் மீடியம் தமிழ் மொழி தமிழ் மொழியும் தொல்காப்பியமும்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #106
    சந்தோஷ்
    Keymaster
    @san

    உலகில் உள்ள மொழிகளுள் மிகப் பழமையான மொழி தமிழ். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் மொழி வரி வடிவம் பெற்று விளங்கியதை ஆய்வுகள் நிறுவுகின்றன.

    இன்று தமிழ் மொழிக்கே ஒரு அடையாளமாக விளங்குகின்ற தொல்காப்பியம், ஒரு மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல். எழுத்து, சொல், பொருள் என மூன்றையும் தொல்காப்பியம் விளக்குகின்றது.

    தொல்காப்பியத்தில் உள்ள எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தமிழ் மொழியின் இயல்பைக் கூறுகின்றது. பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலைக் கூறுகின்றது.

    இந்த தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டுதான் சங்க கால இலக்கிய நூல்கள் அனைத்தும் தோன்றின என நம்பப்படுகின்றது. தொல்காப்பியத்தை எழுதியவர் தொல்காப்பியர் எனவும் நம்பப்படுகின்றது.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.