எட்டுத்தொகை நூல்கள் யாவை?
தமிழ் மீடியம் › தமிழ் மொழி › எட்டுத்தொகை நூல்கள் யாவை?
Tagged: இலக்கியம், எட்டுத்தொகை
- AuthorPosts
- December 9, 2019 at 1:40 PM #115சந்தோஷ்Keymaster@san
வரலாறு
சங்க காலம் என்பது சங்கம் வைத்து தமிழ் மொழியை ஆராய்ந்த காலத்தைக் குறிக்கும். தமிழ் புலவர்கள் அனைவரும் ஒன்று கூடிதமிழ் மொழியை ஆராயும் பெரவைகளை பாண்டிய நாட்டு மன்னர்களின் தலைநகரில் அமைத்து தமிழைப் போற்றினர்.
இத்தைகைய சிறப்பு வாய்ந்த பண்டைத் தமிழரின் வாழ்வை உணர்த்தும் களஞ்சியமாக விளங்குவது சங்க இலக்கியங்களாகும். பாட்டும் தொகையும் எனப் போற்றப்படும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கிய நூல்களாகும்.
சங்க காலத்தின் சிறப்புகளையும், சங்க கால மக்களின் வாழ்க்கை முறையையும் இந்தத் தொகை நூல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
சங்க காலத்தில் வெளியான சங்க இலக்கிய பாடல்கள் அனைத்தும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்களால் பல்வேறு இடங்களில் பாடப்பட்டவை.
இந்த பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாதுகாக்க அவற்றை ஒன்று திரட்டி ஒரு வரைமுறைப்படுத்தி, ஒவ்வொரு பாடல் அடிகளின் வரையறை மற்றும் பொருள் சிறப்பையும் ஆராய்ந்துவிட்டு எட்டு (8) நூல்களாக தொகுத்தனர்.
எட்டுத்தொகை நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுபத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
இவையே எட்டுத்தொகை நூல்கள்.
தமிழ் வரலாற்றுப் பாடல் ஒன்று இந்த எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துக் கூறுகின்றது.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை.
– (த.இ.வரலாறு, ப. 24)பொருள்
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்கள்.
அகப்பொருள் என்றால் சங்ககால தமிழ் மக்களின் அக வாழ்க்கை அல்லது இல்லற வாழ்க்கையில் தலைவன் தலைவி இடையே வரும் காதல், கற்பு போன்றவற்றைப் பற்றி கூறும் நூல்களாகும்.
புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய இரண்டும் புறப்பொருள் பற்றிய நூல்கள். புறப்பொருள் என்றால் சங்க கால மக்களின் புற வாழ்கையில் வரும் போர் முறைகள், மான உணர்வுகள், போர் அறங்கள் போன்றவற்றைப் பற்றி கூறும் நூல்களாகும்.
பரிபாடலில் அகப்பொருள் பற்றிய பாடல்களும் புறப்பொருள் பற்றிய பாடல்களும் கலந்து வருவதால் அகப்புறப்பொருள் பற்றிய நூலாக கருதபடுகின்றது.
இந்த எட்டுத்தொகையும் பத்துப்பாட்டையும் சேர்த்து மொத்தம் பதினெட்டு நூல்கள் உள்ளன. இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- AuthorPosts
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?