இரண்டு பாறைகளின் கதை
தமிழ் மீடியம் › தமிழ் மொழி › இரண்டு பாறைகளின் கதை
Tagged: சிறுகதைகள்
- AuthorPosts
- December 9, 2019 at 2:14 PM #119சந்தோஷ்Keymaster@san
ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன. பல வருடங்களாக ஒரே இடத்தில மழையில் ஊறி, வெயிலில் வாடிக்கிடந்த அந்த பாறைகளுக்கு மிகவும் சலிப்பாக இருந்தது. “நாம் எப்போதாவது இந்த காட்டை விட்டு வேறு இடத்திற்கு நகர்வோமா?” என்று ஏக்கத்துடன் பேசிக்கொண்டன.
அப்பொழுது அந்த காட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு ஊரில் புதிய கோவில் ஒன்றை கட்டலாம் என மக்கள் முடிவு செய்தனர். அந்த கோவிலுக்காக சிற்பங்கள் செதுக்குவதற்கு நல்ல கற்களைத் தேடி, சிற்பிகள் காட்டிற்குள் வந்தார்கள்.
அவர்கள் இந்த இரண்டு பாறைகளையும் பார்த்துவிட்டு. சரியான அளவில் இருந்ததால், அடுத்த நாளே இரண்டு பாறைகளையும் எடுத்துச்செல்லலாம் என முடிவு செய்தனர்.
அவர்கள் சென்ற பிறகு, முதல் பாறை “நம் பல நாள் கனவு நினைவாகப் போகின்றது. நாளைக்கு நாம் ஊருக்குள் போகப் போகிறோம்!” என்று மகிழ்ச்சியுடன் கூறியது.
ஆனால் இரண்டாவது பாறை கோபத்துடன் “அந்த சிற்பிகள் உனக்கு ஊரை சுத்தி காட்டுவதற்காக கூட்டிக்கொண்டு போகவில்லை. அவர்கள் உன்னை அடித்து உடைத்து, ஒரு சிலையாக மாற்றிவிடுவார்கள்” என்று சொன்னது.
அதற்கு முதல் பாறை “ஒன்றை பெற வேண்டுமானால் மற்றொன்றை இழந்துதானே ஆகா வேண்டும்? நான் அந்த வலியைப் பொறுத்துக்கொள்வேன்” என்று தன்னம்பிக்கையுடன் கூறியது.
ஆனால் இரண்டாவது பாறை, “என்னால் அது முடியாது” நாளை அவர்கள் வரும்பொழுது நான் ஆழமாகப் மண்ணுக்குள் சென்று அவர்களால் என்னை தூக்க முடியாதபடி புதைந்துக் கொள்வேன்” என்று முடிவு செய்தது.
மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் வண்டியில் தூக்கி வைத்தார்கள். ஆனால் இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.
சிற்பிகளால் இரண்டாவது பாறையை அகற்ற முடியாததால், முதல் பாறை ஒன்றே போதும் என முடிவு செய்து அதை மட்டும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
இன்று அவர்கள் எடுத்துச் சென்ற முதல் பாறை கோவிலில் ஒரு அற்புதமான கடவுள் சிலையாக ஊர் மக்கள் அனைவராலும் வணங்கபடுகிறது. ஆனால் இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்ளேயே மாட்டிகொண்டு அவதிப்படுகின்றது.
கதை சொல்லும் கருத்து:
இதே போல நம் வாழ்விலும் நமக்கு அமையும் சில அரிய வாய்ப்புகளை, தவற விடாமல் பற்றிக்கொண்டு நம்மை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். வாழ்வில் ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என்பதை உணர்ந்தால் நீங்கள் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது.
- AuthorPosts
Advertisement
சமீப பதிவுகள்
- கிரகங்களின் தமிழ் பெயர்கள் அறிவோம்
- தனிம வரிசை அட்டவணை தமிழில்
- இராமானுஜன் சதுர அணிக் கணிதம் – ராஜா மினால்
- ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
- கணக்குப் புதிர் 1: மறைந்த எண்ணை கண்டுபிடியுங்கள்
- எதிர்மின்னி, நேர்மின்னி மற்றும் நொதுமி
- அணுக்கரு மற்றும் அணுக்கருனிகள்
- சுருள்வில் என்றால் என்ன?
- திருகாணி மற்றும் திருப்புளி
- மின் திறன் என்றால் என்ன?
- நியூட்ரினோ என்றால் என்ன?
- மேற்பரப்பு இழுவிசை என்றால் என்ன?
- சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்
- இரண்டு பாறைகளின் கதை
- எட்டுத்தொகை நூல்கள் யாவை?