சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்

தமிழ் மீடியம் அறிவியல் சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #122
    சந்தோஷ்
    Keymaster
    @san

    சமூக வலைத்தளங்களின் மறுபக்கம்

    நீங்கள் எப்பொழுதாவது பேஸ்புக், ட்விட்டர், வாட்சப் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு லைக் அல்லது ஒரு கமெண்ட் எதிர்பார்த்து பதிவுகளை செய்துள்ளீர்களா? அப்படியென்றால் நீங்களும் இந்த சமூக வலைத்தளங்கள் விரித்த வலையில் மாட்டிக்கொண்டீர்கள் என்று தான் அர்த்தம்.

    பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னால் பயனர் வளர்ச்சியின் துணைத் தலைவர், சமத் பலிஹபிடியா என்பவர் ஒரு உண்மையை வெளியிட்டுள்ளார்.

    அவர் பேஸ்புக் இல் பணிபுரிந்த காலத்தில் பேஸ்புக் ஐ மக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த செயல்களை நினைத்து அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.

    பேஸ்புக் மற்றும் பல சமூக வலைத்தளங்கள் தனது சுயலாபத்திற்காக மக்கள் மனதை மாற்றும் யுக்தியை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் அந்த உண்மை. அப்படி என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி பார்பதற்கு முன்பு, டோபமின் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.

    டோபமின்

    டோபமின் என்பது நம் மூளையில் உள்ள நரபணுக்கள் சுரக்கும் ஒரு கரிம இராசயினம்.

    உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு செயலை செய்கிறீர்கள். நீங்கள் செய்த அந்த செயலுக்கு ஒரு பாராட்டோ அல்லது ஒரு பரிசோ கிடைத்தால், உங்கள் மூளையில் உள்ள இந்த நரபணுக்கள் இந்த டோபமின் இரசாயினத்தை சுரக்கும்.

    இதன் விளைவாக சிறிதுநேரம் நீங்கள் கவலைகளை மறந்து உற்சாகமாவீர்கள். ஆனால் இது நிரந்தரமான மகிழ்ச்சியல்ல, சிறிது நேரம் கழித்து இந்த உற்சாகம் மறைந்துவிடும்.

    பிறகு மீண்டும் இந்த டோபமின் உண்டாகும் செயலைச் செய்ய உங்களை மனது தூண்டும். இதனால் சிறிது நேரம் கழித்து திரும்பவும் அந்த செயலை நீங்கள் செய்வீர்கள்.

    காபி, புகையிலை மற்றும் மது பழக்கத்திற்கு மக்கள் அடிமையாவதற்கும் மூளையில் சுரக்கும் இந்த டோபமின் தான் காரணம்.

    இதை உளவியல் துறையில் “டோபமின் பீட்பேக் லூப்” (dopamine feedback loop) என்று சொல்வார்கள். சரி, இதற்கும் சமூக ஊடகங்களுக்கும் என்ன சம்பந்தம்?

    சமூக ஊடகங்களின் மறுபக்கம்

    உதாரணத்திற்கு, நீங்கள் பேஸ்புக், ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராம் இல் ஒரு பதிவை செய்கிறீர்கள். உங்களின் அந்த பதிவிற்கு உங்கள் நண்பர்கள் லைக் அல்லது ஒரு கமெண்ட் செய்கிறார்கள். இதை உங்கள் மூளையில் உள்ள நரபணுக்கள் நீங்கள் செய்த செயலுக்குக் கிடைத்த ஒரு பரிசாக எடுத்துக்கொண்டு டோபமின் ஐ சுரக்கும். இதனால் உங்கள் மனதும் உற்சாகமாகும்.

    திரும்பவும் சிறிது நேரம் கழித்து இந்த சமூக ஊடகங்களுக்குச் சென்று ஏதாவது ஒரு பதிவை செய்யவேண்டும் என்று உங்கள் மனது உங்களைத் தூண்டும். அதனால் மீண்டும் அந்த செயலை நீங்கள் செய்வீர்கள்.

    சமூக ஊடகங்களின் மறுபக்கம்

    இது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல வாட்சப் போன்ற தகவல் பரிமாற்ற தளங்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு, வாட்சப் இல் நீங்கள் ஒரு செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அனுப்புகிறீர்கள். அதை அவர்கள் படித்துவிட்டு நன்றாக உள்ளது என்று உங்களை பாராட்டுகிறார்கள். இதனால் நீங்கள் தினமும் நீங்கள் செய்திகளையும் ஸ்வரசசியமான தகல்வல்களையும் அனுப்பிக்கொண்டே இருப்பீர்கள்.

    சரி, இந்த டோபமின் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்காலத்தில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளும் தகவல்களும் பரவுவது வழக்கமாகிவிட்டது.

    சமூக ஊடகங்களில் மக்கள் ஒரு செய்தியை உண்மையா அல்லது பொய்யா என்று ஆராயாமலே பரப்புகிறார்கள். இதனால் சிலர் பாதிப்பு அடைவார்கள் என்பதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. இது சமூக வலைத்தளங்களை நடத்துபவர்களுக்கும் தெரியும்.

    இந்தியாவில் டெல்லியில் பூகம்பம் வரப்போகின்றது என்ற ஒரு புரளி பரவியதற்கும் இந்த வாட்சப் தான் காரணம். இந்த சமூக வலைத்தளங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி, பணம் மற்றும் பதவி உடையவர்கள், தாங்கள் விரும்பிய செயலை மக்களைச் செய்ய வைக்க இதை பயன்படுத்துகிறார்கள்.

    இதை சமூக வலைத்தளங்களும் அனுமதிக்கின்றன. ஏன்னென்றால் இதனால் அவர்களுக்கு லாபம் கிடைக்கின்றது.

    இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் நடக்கும் தேர்தலில் மக்கள் மனதை மாற்றி சில தலைவர்களுக்கு சாதகமாக வாக்களிக்க வைக்க இந்த சமூக வலைத்தளங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

    உங்களையும் உங்கள் குழந்தைகளையும் இந்த சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.

Viewing 1 post (of 1 total)
  • இங்கு உங்கள் கருத்தை பதவு செய்ய உள்நுழைக. Log in or Register.